பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2020 | 3:34 pm

Colombo (News 1st) புத்தளம் – ஆனைவிழுந்தான் வனப்பகுதியை துப்புரவு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ஜகத் சமந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஆவார்.

நீதிமன்றத்தில் ஆஜரான ஜகத் சமந்தவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜகத் சமந்தவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மன்றில் ஆஜரான ஜகத் சமந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்