டஸ்மானியா தீவில் சிக்கிய 90 திமிங்கிலங்கள் உயிரிழப்பு

டஸ்மானியா தீவில் சிக்கிய 90 திமிங்கிலங்கள் உயிரிழப்பு

டஸ்மானியா தீவில் சிக்கிய 90 திமிங்கிலங்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

22 Sep, 2020 | 10:08 am

Colombo (News 1st) அவுஸ்ரேலியாவின் டஸ்மானியா (Tasmania) கடற்கரையில் சிக்கிய 270 திமிங்கிலங்களில் 90 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன.

சிக்கியுள்ளவற்றில் மேலும் பல உயிரிழக்கக்கூடுமென அஞ்சப்படுகின்றது.

டஸ்மானியா தீவின் மேற்குக் கடற்பகுதியில் திமிங்கிலங்கள் சிக்கிக்கொண்டிருப்பது நேற்று (21) கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் எஞ்சியுள்ள திமிங்கிலங்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக தந்திரமான நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்படுவதுடன், அதற்கு சில தினங்கள் எடுக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திமிங்கிலங்கள் கரைக்கு வந்ததற்கான காரணம் என்னவென்பது இதுவரை ​தெரியவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்