கண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்

கண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்

கண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்

எழுத்தாளர் Fazlullah Mubarak

21 Sep, 2020 | 10:12 am

கண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் பிரதம வைத்திய அதிகாரி, பிரதேச அரசியல்வாதி ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட செயலாளர் டொக்டர் ஏ.எம். பிரேமலால் தெரிவித்தார்.

இதனடிப்படையில், இன்று காலை 08 மணி முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த அரசியல்வாதி, தொடர்ச்சியாகவே குழப்பம் விளைவித்துவந்த நபர் என்பதுடன் அவர் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட செயலாளர் டொக்டர் ஏ.எம். பிரேமலால் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சந்​தேக நபர் வேறு பொலிஸ் பிரிவில் வசிப்பதால் அவரை கைது செய்ய முடியாமல் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்