by Staff Writer 20-09-2020 | 2:19 PM
Colombo (News 1st) New Diamond கப்பலிலிருந்து கடலில் கசிந்துள்ள மசகு எண்ணெயின் அடர்த்தியினை குறைப்பதற்கு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கப்பலுக்கு அருகிலிருந்து 2 கடல் மைல் தொலைவு வரை எண்ணெய் படிமங்கள் படிந்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
குறித்த எண்ணெய் படிமங்களில் விமான படையூடாக, படிமங்களின் அடர்த்தியை குறைப்பதற்கான திரவம் விசுறப்படுவதாகவும் எண்ணெய் படிமத்தினூடாக படகினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், எண்ணெய் படிவம் தொடர்ந்தும் கடலில் உள்ளதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.