by Staff Writer 20-09-2020 | 8:02 AM
Colombo (News 1st) அடுத்த வருடத்தின் இறுதி காலப்பகுதியில் நாட்டில் மஞ்சள் செய்கை மூலம் தன்னிறைவு அடைய முடியும் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை உள்நாட்டு தேவைக்காக வருடாந்தம் 5,300 மெட்ரிக் தொன் மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி. ஹின்கெந்த தெரிவித்துள்ளார்.
10 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக விவசாய திணைக்களம் மேலும் கூறியுள்ளது.