போதைப்பொருள் கடத்தல்காரர் ‘பரெல் ரஞ்சி’ கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் ‘பரெல் ரஞ்சி’ கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் ‘பரெல் ரஞ்சி’ கைது

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2020 | 1:45 pm

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரெல் ரஞ்சி’ என அழைக்கப்படும் மொஹமட் ஃபாரூக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் ஹெரோயின், 20 கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபருடன் 31 வயதான யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதியிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இன்று (20) காலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்