பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2020 | 11:48 am

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குப்பத்திரம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இதனூடாக வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் எழுத்து மூலமாக இதுவரை வழங்கப்பட்டு வருகின்றது.

இதனால் வீண் பணச்செலவு ஏற்படுவதுடன் நேரமும் வீண் விரயமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசையில் இத்தகைய ஆவணங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் ஏனைய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்