பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினி கொள்வனவிற்கு கடன் வசதி

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினி கொள்வனவிற்கு கடன் வசதி

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினி கொள்வனவிற்கு கடன் வசதி

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2020 | 1:18 pm

Colombo (News 1st) பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஒரு இலட்சம் ரூபா சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் கடனை மீள செலுத்துவதற்கு இயலும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கு Online கல்வி முறையை தொடர்வதற்காகவும் இந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிட்டா லியனகே கூறியுள்ளார்.

2019 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆங்கில பாடநெறிகள் Online ஊடாக கற்பிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்