ரணில் விக்ரமசிங்க இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

ரணில் விக்ரமசிங்க இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

ரணில் விக்ரமசிங்க இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2020 | 3:59 pm

Colombo (News 1st) முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இரண்டாவது நாளாகவும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ. ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளனர்.

திவிநெகும திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்ட போது , பணியிலிருந்து விலகிய ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கல் செயற்பாடு மற்றும் இசுருமத் வீடமைப்புத் திட்டத்தில் சலுகை வழங்கியமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெற்றதாக ஆர்.ஏ. ரணவக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கு கிடைத்த சாட்சியங்களுக்கு அமைய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரை இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்