போதைப்பொருள் கடத்தலின் பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும்: மெதகொட தேரர் வலியுறுத்தல் 

போதைப்பொருள் கடத்தலின் பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும்: மெதகொட தேரர் வலியுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2020 | 7:55 pm

Colombo (News 1st) போதைவஸ்தை ஒழிக்கும் செயற்பாட்டிற்கான சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்புலத்தில் இருக்கும் சக்திகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனும் விவாதம் உருவாகியுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவகம் என்பன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

சமூக பொலிஸ் அதிகாரிகள், மகளிர் சிறுவர் பிரிவு அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கியஸ்தர்களைக் கைது செய்ய வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வலியுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்