நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி தமிழ் கட்சிகள் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்ப ஏற்பாடு

by Staff Writer 19-09-2020 | 8:09 PM
Colombo (News 1st) நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி சில தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பவுள்ளன. அதற்காக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண சபை அவைத் தலைவர் அலுவலகத்தில் அந்த மகஜரில் கையொப்பமிட்டனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கடிதத்தில் கையொப்பமிட்டன.