நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு

நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு

நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Sep, 2020 | 4:38 pm

 Colombo (News 1st) பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தினூடாக இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், கடந்த 2019 இலிருந்து லண்டனில் வசித்து வருகின்றார்.

வௌிநாட்டில் சிகிச்சை பெறுவதற்காக 08 வாரங்கள் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நாடு திரும்பவில்லை.

இதனை கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு வௌிவிவகார செயலாளருக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்