இலங்கையில் முதற்தடவையாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கண்டாவளை பிரதேச செயலகத்தில் அறிமுகம்

இலங்கையில் முதற்தடவையாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கண்டாவளை பிரதேச செயலகத்தில் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2020 | 8:27 pm

Colombo (News 1st) இலங்கையில் முதற்தடவையாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில், பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி இந்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இதற்கான நிகழ்வினை இன்று காலை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் கரைச்சி, பூநகரி பிரதேச செயலாளர்களுடன் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிப்பவர்கள் பிரதேச செயலகத்தின் கீழ் பெறும் சேவையினை இலகுபடுத்தும் நோக்கில் இந்த இலத்திரனியல் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்