இதுவரை 3,281 பேருக்கு கொரோனா தொற்று; 2,64,343 பேருக்கு PCR சோதனைகள் முன்னெடுப்பு

இதுவரை 3,281 பேருக்கு கொரோனா தொற்று; 2,64,343 பேருக்கு PCR சோதனைகள் முன்னெடுப்பு

இதுவரை 3,281 பேருக்கு கொரோனா தொற்று; 2,64,343 பேருக்கு PCR சோதனைகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2020 | 3:38 pm

Colombo (News 1st) நாட்டில் இதுவரை 3,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (18) மாத்திரம் 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கு நாட்டில் இதுவரை 2,64,343 PCR சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது.

நேற்று மாத்திரம் 1,760 PCR சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கந்தக்காடு மற்றும் சேனபுர தனிமைப்படுத்தல் நிலையங்களில் இதுவரை 649 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவோரில் 281 பேர் இன்று அங்கிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதுவரை 42,980 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

முப்படையினரால் பராமரிக்கப்படும் 62 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,172 பேர் தற்போது கண்காணிக்கப்படுகின்றனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த 638 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதுடன், தொடர்ந்தும் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்