by Staff Writer 18-09-2020 | 4:38 PM
Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் COPE எனப்படும் பாராளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் 2.30-க்கு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்போது, செயற்குழுக்களில் உறுப்பினர்களாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளதுடன், செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு மற்றும் அரச கணக்குகள் தெரிவுக் குழுக்களில் 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அரச கணக்குகள் தொடர்பிலான செயற்குழுவினால் அரசாங்கம், அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் நிதி முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
இதனிடையே, எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பிலான செயற்குழுவின் (COPP) முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.