இந்தியாவில் பால்ய விவாகம் அதிகரிப்பு

இந்தியாவில் பால்ய விவாகம் அதிகரிப்பு

by Bella Dalima 18-09-2020 | 6:14 PM
Colombo (News 1st) இந்தியாவில் பால்ய விவாகம் அதிகரித்துள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது. பால்ய விவாகம் தொடர்பில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் மேலதிகமாக 17 வீத முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 18 வயதிற்கும் குறைந்தோருக்கு திருமணம் செய்து வைத்தல் இந்தியாவில் சட்டவிரோதமானது. இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் பால்ய விவாகங்கள் அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாமிடத்திலுள்ளது. இந்தியாவில் வருடமொன்றில் மாத்திரம் 1.5 மில்லியன் பால்ய விவாகங்கள் இடம்பெறுவதாக UNICEF தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்களின் வீதமும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் சுமார் 10 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.