புதிய 25 வனப் பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க திட்டம்

புதிய 25 வனப் பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க திட்டம்

புதிய 25 வனப் பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க திட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2020 | 3:55 pm

Colombo (News 1st) புதிய 25 வனப்பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க வனப் பாதுகாப்பு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அநுராதபுரம், மொனராகலை, காலி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வனங்கள் பெயரிடப்படவுள்ளதாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.A.C. வேரகொட தெரிவித்தார்.

73,000 ஏக்கர் நிலப்பகுதிக்கும் அதிக பரப்பு இவற்றில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்குள் இவை வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளன.

நாட்டில் வன வலயங்களை அதிகரிப்பது இதன் நோக்கமாகும் என வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் W.A.C.வேரகொட சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்