சீன தூதரக அதிகாரிகள் – நீதி அமைச்சர் இடையில் சந்திப்பு

சீன தூதரக அதிகாரிகள் – நீதி அமைச்சர் இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2020 | 8:30 pm

Colombo (News 1st) நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் முதல் செயலாளர் Rang Xiong ஆகியோர் நீதி அமைச்சில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பின் அபிவிருத்திக்காக சீன அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் வழங்குவதாக சீனப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றக் கட்டடங்களின் இடப்பற்றாக்குறை மற்றும் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்