இலங்கை தேயிலைக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை தேயிலைக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை தேயிலைக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2020 | 5:38 pm

Colombo (News 1st) உலக வர்த்தக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மிளகு வர்த்தகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு, தேயிலைத்துறைக்கு ஏற்பட இடமளிக்க கூடாதெனவும் அவர் கூறியுள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் நீண்டகாலமாக முக்கிய இடத்தை வகிக்கின்ற ” சிலோன் டீ” நாமத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென தேயிலை தொழிற்சாலைகள் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆரோக்கியமான தேயிலை உற்பத்தி தொடர்பில் சிறு மற்றும் மத்திய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்