உளுந்து இறக்குமதி மீதான தடை மறுபரிசீலனை

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 18-09-2020 | 4:21 PM
Colombo (News 1st) உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தரவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் பிரதமரிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதி செயலாளருக்கு இன்று காலை இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். உளுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ். வர்த்தக சங்கம் தமது கடிதத்தினூடாக பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து, உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வது குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.