by Staff Writer 18-09-2020 | 4:48 PM
Colombo (News 1st) பண்டாரகம - அட்டலுகம பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பண்டாரவளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 2.30 அளவில் அட்டலுகம பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அட்டலுகம பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் மேலும் 04 பேர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு பலாங்கொடை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பலாங்கொடை - குரகல பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று (17) மாலை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.