by Staff Writer 17-09-2020 | 2:05 PM
Colombo (News 1st) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேலும் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகிறார்.
அதற்கான தேவைகள் மற்றும் அதனை எவ்வாறு முன்னோக்கி கொண்டுசெல்வது? அதனை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்பவில்லையாயின் அதற்கான காரணங்களை ஆராய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதுபோலவே 13 ஆவது திருத்தம் தோற்றம் பெறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றதாகவும் இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இதேவேளை, பகிரங்க விவாதத்தில் ஏற்படும் சந்தேகங்கள் ஜனாநாயகத்தின் பண்பாகும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது தெரிவித்தார்.