சுற்றுலாத்துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தீர்மானம்

சுற்றுலாத்துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தீர்மானம்

சுற்றுலாத்துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2020 | 7:24 am

Colombo (News 1st) சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான திட்ட அறிக்கை வகுக்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றினால் சுற்றுலாத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள், தொழிலை இழந்துள்ள நிலையை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாத்திரம் ஓய்வூதியத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமது அதிகார சபையில் சுமார் 250,000 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாக தம்மிகா விஜேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்