களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம்

களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2020 | 8:06 pm

Colombo (News 1st) களனி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இன்று பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியாக சென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் தண்டனையை தளர்த்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமரா கட்டமைப்பை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சில மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டது.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்