ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திற்கான 4 வர்த்தமானிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திற்கான 4 வர்த்தமானிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திற்கான 4 வர்த்தமானிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2020 | 5:19 pm

Colombo (News 1st) இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திற்கான 4 வர்த்தமானிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

COVID-19 வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு தேவையான மருந்துகள், இரசாயனப் பொருட்கள், சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும், இறக்குமதி செய்து நன்கொடையளிப்பதற்குமான VAT வரியை நீக்குவதற்குரிய வர்த்தமானி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சீமெந்து இறக்குமதிக்கான தீர்வை வரி தொடர்பான திருத்தங்களுக்குரிய வர்த்தமானியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சீமெந்து கட்டிகளை இறக்குமதி செய்வதற்கான தீர்வை வரியை நீக்குதல், காலணி தயாரிப்பிற்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவைகளின் இறக்குமதிக்கு தீர்வை வரியை அறவிடுவதற்கான வர்த்தமானியும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்