உகண்டாவில் 200 கைதிகள் தப்பியோட்டம்

உகண்டாவில் 200 கைதிகள் தப்பியோட்டம்

உகண்டாவில் 200 கைதிகள் தப்பியோட்டம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Sep, 2020 | 8:47 am

Colombo (News 1st) கிழக்கு ஆபிரிக்க நாடான உகண்டாவின் வட கிழக்கு பகுதியான மொரோட்டோவில் உள்ள சிறைச்சாலையிலிருந்து 200 இற்கும் அதிக கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்றுள்ள கைதிகள் சிலர் இராணுவ வீரர் ஒருவரை கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் தப்பியோடியதாக தெரிவிக்கப்படும் கைதிகளை கைது செய்யும் நோக்கில் இராணுவம் மற்றும் சிறை அதிகாரிகளால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டிருந்த மஞ்சள் நிறத்தினாலான சிறைக்கைதிகளுக்கான ஆடையை களைந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்