7 மாதங்களில் 228 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரக்கறி இறக்குமதி

7 மாதங்களில் 228 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரக்கறி இறக்குமதி

7 மாதங்களில் 228 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரக்கறி இறக்குமதி

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2020 | 5:50 pm

Colombo (News 1st) வருடத்தின் முதல் 7 மாதங்களில் 228 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரக்கறி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இடம்பெற்ற மரக்கறி இறக்குமதியின் 38 வீத அதிகரிப்பாகும்.

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியும் குறித்த 7 மாதங்களுக்குள் அடங்குகின்றது.

இந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பால் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட 15.6 வீத அதிகரிப்பாகும்.

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இடம்பெற்ற வௌிநாட்டுப் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, இலங்கை மத்திய வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் நாட்டின் வருமானத்தில் 21.4 வீத குறைவு பதிவாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இறக்குமதிக்கான செலவு 20.07 வீதத்தால் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் அறிக்கையின் படி வருடத்தின் ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக எவ்வித வருமானங்களும் பதிவாகவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்