by Chandrasekaram Chandravadani 16-09-2020 | 12:19 PM
Colombo (News 1st) ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடே சுகா தெரிவாகியுள்ளார்.
அந் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இராஜினாமாவை தொடர்ந்து யொஷிஹிடே சுகா தெரிவாகியுள்ளார்.
அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இன்று (16) இடம்பெற்ற வாக்கெடுப்பில் 71 வயதான யொஷிஹிடே சுகா, ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
462 உறுப்பினர்களில் 314 வாக்குகள் சுகாவுக்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன.
ஆளும் கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சிக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது.
ஜப்பானில் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதுவரை புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தெரிவு பதவியில் நீடிக்கவுள்ளார்.
உடல்நிலை குறைவு காரணமாக ஜப்பானின் பிரதமர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் ஷின்ஸோ அபே கடந்த மாதம் விலகியமை குறிப்பிடத்தக்கது.