வீதி விதிமுறையை மீறுவோருக்கு 2,000 ரூபா அபராதம்

வீதி விதிமுறையை மீறுவோருக்கு 2,000 ரூபா அபராதம்

வீதி விதிமுறையை மீறுவோருக்கு 2,000 ரூபா அபராதம்

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2020 | 11:22 am

Colombo (News 1st) வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு நாளை (17) முதல் அபராதம் அறவிடப்படும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதி ஒழுங்கு விதிமுறையை மீறும் சாரதிகளிடம் 2,000 ரூபா அபராதம் அறவிடப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட கூறினார்.

இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதி முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதை ஆராய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட 20 இடங்களில் பொலிஸ் அதிகாரிகளுடன் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வீதி ஒழுங்கு விதி அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகளின் நிலையை மதிப்பீடு செய்ய விமானப்படையின் 4 Drone குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்