நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிகளுடன் எண்மர் கைது 

நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிகளுடன் எண்மர் கைது 

நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிகளுடன் எண்மர் கைது 

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2020 | 12:30 pm

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் மூவர் திக்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வசமிருந்த வௌிநாட்டு தயாரிப்பிலான 2 ரிவோல்வர்கள், கைத்துப்பாக்கி ஒன்றுடன் 3.8 மில்லிமீற்றர் வகையிலான 5 ரவைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39, 45 மற்றும் 27 வயதுடைய திக்வெல்ல, வலஸ்கல மற்றும் நாக்குளுகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திக்வெல்ல பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் ருவன்வெல்ல டெஸ்மன்ஹில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதாவக்கும்புற பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

60 மற்றும் 42 வயதுடைய கல்பாத பகுதியைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, யக்கலமுல்ல உடுவெல பகுதியில் வௌிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியுடன் 39 வயதாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, யக்கலமுல்ல வத்தஹேன பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியுடன் 46 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியுடன் சந்தேக நபர் உடுகம நாக்கியாதெனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சி பிஹிபியகொல்லேவ மயானத்தில் இருந்து வௌிநாட்டுத் தயாரிப்பிலான துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்