டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2020 | 9:58 am

Colombo (News 1st) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 29,986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகையில் 17,854 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வொல்பெகியா பெக்டீரியாவுடன் கூடிய நுளம்புகள் சூழலில் பரவியுள்ளதுடன் அவை விருத்தியடைய 6 மாதங்கள் செல்லும் என வைத்தியர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்