இஸ்ரேல் – வளைகுடா நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மத்திய கிழக்கின் விடியல் – ட்ரம்ப் பாராட்டு

இஸ்ரேல் – வளைகுடா நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மத்திய கிழக்கின் விடியல் – ட்ரம்ப் பாராட்டு

இஸ்ரேல் – வளைகுடா நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மத்திய கிழக்கின் விடியல் – ட்ரம்ப் பாராட்டு

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2020 | 9:24 am

Colombo (News 1st) ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைனுடனான
இஸ்ரேலின் வரலாற்று ஒப்பந்தம் மத்திய கிழக்கின் விடியல் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

இஸ்ரேலுடனான தமது உறவை சுமூகமாக்கும் உடன்படிக்கைகளில் இரு வளைகுடா நாடுகளும் கைச்சாத்திட்டுள்ள நிலையில் ட்ரம்ப் இதனை கூறியுள்ளார்.

இந்த உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென 3 நாடுகளும் தெரிவித்துள்ளன.

1984 இல் இஸ்ரேல் நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், அதனை ஏற்றுக்கொண்ட மூன்றாவது மற்றும் நான்காவது அரபு நாடுகளாக வளைகுடா நாடுகள் காணப்படுகின்றது.

இந்த உடன்படிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய நாடுகளும் இஸ்ரேலுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும் என ட்ரம்ப் எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது.

எனினும் தமது பிரச்சினை தீர்க்கப்படும் வரை சமரசத்துக்கு வரவேண்டாம் பலஸ்தீனியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பலஸ்தீனுடனான சர்ச்சை தீர்க்கப்பட்டதன் பின்னரே இருதரப்பு உறவை வலுப்படுத்திக்கொள்வதாக தெரிவித்து சில தசாப்தங்களாக ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்ரேலை புறக்கணித்து வந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்