இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் தொகை 5 மில்லியனை கடந்தது

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் தொகை 5 மில்லியனை கடந்தது

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் தொகை 5 மில்லியனை கடந்தது

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2020 | 11:46 am

Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியாவிலேயே அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரையில் கொரோனாவினால் 82,091 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அண்மையில் உடற்பயிற்சிக் கூடங்கள் மீள திறக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், அதிகமான வேலைத்தளங்கள் வழமைக்குத் திரும்பியுள்ள அதேநேரம், மக்கள் அதிகளவில் ஒன்றுகூடக்கூடிய இடமான மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களை மீள திறப்பதற்கு பல நகரங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்