20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்: மீளாய்வுக் குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

by Staff Writer 15-09-2020 | 3:48 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது. குறித்த குழுவினூடாக அலரி மாளிகையில் வைத்து இன்று அறிகை சமர்ப்பிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக நியமிக்கப்பட்ட இந்த குழுவின் தலைவராக அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் செயற்படுகின்றார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், திருத்த வேண்டிய விடயங்கள் என்பன இதன்போது பிரதமருக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய பிரதமரினால் அண்மையில் இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்