நோர்வூட்டில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 10 பேர் காயம்

by Staff Writer 15-09-2020 | 11:15 AM
Colombo (News 1st) ஹட்டன் - பொகவந்தலாவ வீதியில் நோர்வூட் நிவ்வெலிகம பகுதியில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்களே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ்ஸும் மோதி இன்று (15) காலை விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். விபத்தில் காயமடைந்த பெண்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.