பால் உற்பத்தி அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி ஆலோசனை

தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை 

by Staff Writer 15-09-2020 | 7:10 AM
Colombo (News 1st) தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அரச மற்றும் தனியார் பிரிவு விவசாயிகளை இணைத்துக் கொண்டு குறுகிய மற்றும் நீண்ட கால திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மற்றும் கால்நடைகளுக்கான உணவு உற்பத்தி தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது சிறு பால் பண்ணையாளர்களை பலப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும் செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.