by Staff Writer 15-09-2020 | 3:29 PM
Colombo (News 1st) திருகோணமலை - கோமரன்கடவல, நீலபணிக்கை குளத்தில் முதலையைக் கொன்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
08 அடி நீளமான முதலை ஒன்றே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுவோரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கொல்லப்பட்ட 03 முதலைகளின் எலும்பு எச்சங்கள் சந்தேகநபர்களிடம் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.