இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கிழக்கு அரசியல்வாதிகள் சிலருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கிழக்கு அரசியல்வாதிகள் சிலருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கிழக்கு அரசியல்வாதிகள் சிலருடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2020 | 7:33 pm

Colombo (News 1st) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் சிலரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் நேற்று (14) சந்தித்தார்.

அம்பாறை, நாவிதன்வெளி பகுதியில் உள்ள த.கலையரசனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்