எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் 20 ஆவது திருத்தம்

20 ஆவது திருத்தம் சுயாதீன நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் - ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்

by Staff Writer 14-09-2020 | 7:56 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மனித உரிமை ஆணைக்குழு போன்ற பிரதான சுயாதீன நிறுவனங்களுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பெச்லே இன்று (14) தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை அச்சுறுத்துதல் மற்றும் அவர்களை சோதனையிடுவதை நிறுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமான போது ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் காணப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்கு உள்ள தேவையை கருத்திற் கொண்டு, இலங்கை தொடர்பில் புதிய கண்ணோட்டம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிஷெல் பெச்லே, சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்