20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமனம் 

by Staff Writer 14-09-2020 | 5:32 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் பேராசியர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில அமைச்சர் மொஹம்மட் அலி ஷப்ரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் விமல் வீரவங்ச இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.