20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமனம் 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2020 | 5:32 pm

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் பேராசியர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில
அமைச்சர் மொஹம்மட் அலி ஷப்ரி
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
அமைச்சர் விமல் வீரவங்ச
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்