ஷின்ஸோ அபேவிற்கு பதிலாக யொஷிஹிடே சுகா தெரிவு

ஜப்பானின் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக யொஷிஹிடே சுகா தெரிவு

by Staff Writer 14-09-2020 | 4:02 PM
Colombo (News 1st) ஜப்பானின் கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக, அந்நாட்டின் அமைச்சரவை செயலாளர் யொஷிஹிடே சுகா (Yoshihide Suga) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஷின்ஸோ அபேவுக்கு பதிலாக புதிய கட்சித்தலைவரை தெரிவு செய்வதற்காக, ஜப்பான் ஆளும் கட்சியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றுள்ளார். உடல்நிலையை கருத்திற்கொண்டு ஜப்பானிய பிரதமர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் ஷின்ஸோ அபே கடந்த மாதம் விலகினார். 71 வயதான யொஷிஹிடே சுகா, நாளை மறுதினம் (16) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சிக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதுவரை புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுபவர் பதவியில் நீடிப்பார்.