'லடியா' என்பவரின் 3 பஸ்கள் பொலிஸார் வசமானது 

குற்றச்செயல்களில் ஈடுபடும் லடியாவின் 3 பஸ்களை பொலிஸார் கைப்பற்றினர்

by Staff Writer 14-09-2020 | 3:19 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவர், போதைப்பொருள் கடத்தலினூடாக பெறப்பட்ட வருமானத்தில் கொள்வனவு செய்த 03 பஸ்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். லடியா என அழைக்கப்படும் தினமுல்ல கங்காணம்லாகே நலின் சத்துரங்க என்பவருக்கு சொந்தமான 2 சொகுசு பஸ்களும் ஒரு சாதாரண சேவை பஸ்ஸொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 3 சந்தேக நபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.