அரசின் எதிர்கால திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 14-09-2020 | 8:59 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் முதல்தடவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (13) வியத்மக அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார். அத்துள்கோட்டையில் உள்ள வியத்மக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசியல் நிருவாகம் இடையீடு செய்ய வேண்டிய இடங்களை அறிந்து அதனுடன் தொடர்புபடாமல் நாட்டின் எதிர்கால பயணத்திற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கான பொறுப்பு வியத்மக அமைப்புக்கு உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இராஜாங்க அமைச்சுகளின் செயற்பாடுகளுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கவும் அந்த அமைப்புக்கு இயலுமை உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.