நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 13-09-2020 | 4:49 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் இன்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளனர். கத்தாரிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த 08 பேருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைப்பட்டிருந்தவர்களென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,204 ஆக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 14 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.