தபால் திணைக்களத்தில் 1633 வெற்றிடங்கள் 

தபால் திணைக்களத்தில் 1633 வெற்றிடங்கள் 

தபால் திணைக்களத்தில் 1633 வெற்றிடங்கள் 

எழுத்தாளர் Staff Writer

13 Sep, 2020 | 4:26 pm

Colombo (News 1st) தபால் திணைக்களத்தின் பல்வேறு துறைகளில் 1,633 வெற்றிடங்கள் காணப்படுவதாக தபால் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இந்த வெற்றிடங்கள் காரணமாக தபால் திணைக்களத்தின் செயல்திறன் மற்றும் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதங்களை விநியோகிக்கும் தபால் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதால், கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

தனிப்பட்ட ரீதியான கடிதங்கள் தற்போது குறைவடைந்துள்ள போதிலும், வர்த்தக ரீதியிலான கடிதங்கள், பொதிகள் ஆகியன அதிகரித்துள்ளதாக தபால் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தோட்டங்களுக்கு கடிதங்களை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு, உரிய நடைமுறைகளை தயாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

எனினும் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் காரணமாக குறித்த நடைமுறைகளை தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்