by Staff Writer 12-09-2020 | 3:40 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள புதிய உறுப்பினர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை இதுவரை மீள கையளிக்காமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இம்முறை 81 பேர் புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இவர்களுக்கு இதுவரை உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்க முடியாதுள்ளதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனால் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் கலந்துகொள்ள வரும் புதிய உறுப்பினர்கள் தனிப்பட்ட விடுதிகளில் தங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சிலர் தமக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்களையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.