வெலே சுதாவின் சகோதரி உள்ளிட்ட மூவர் கேரள கஞ்சாவுடன் கைது

வெலே சுதாவின் சகோதரி உள்ளிட்ட மூவர் கேரள கஞ்சாவுடன் கைது

வெலே சுதாவின் சகோதரி உள்ளிட்ட மூவர் கேரள கஞ்சாவுடன் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2020 | 4:02 pm

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகோதரி, அவரின் கணவர் உள்ளிட்ட மூவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹக்மன – முருதமுரே பகுதியில் உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பயணித்த காரின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சாரதியிடமிருந்து 5 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தெய்யந்தர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்