மலையக மக்கள் முன்னணிக்கு புதிய பொதுச்செயலாளர்

மலையக மக்கள் முன்னணிக்கு புதிய பொதுச்செயலாளர் நியமனம்

by Staff Writer 11-09-2020 | 4:53 PM
Colombo (News 1st) மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் விஜய சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற கட்சிப் பேரவைக் கூட்டத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டதாக கட்சியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனிடையே, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய A.லோரன்ஸ் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், உடல்நலத்தை கருத்திற்கொண்டும் அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கருதியும் தாம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்ததாக A.லோரன்ஸ் குறிப்பிட்டார். இதேவேளை, கட்சியின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு எதிர்காலத்தில் மேலும் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.