புலம்பெயர் முதலீட்டாளர்களை சந்தித்தார் பிரதமர்

புலம்பெயர் முதலீட்டாளர்களை சந்தித்தார் பிரதமர்

புலம்பெயர் முதலீட்டாளர்களை சந்தித்தார் பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2020 | 4:59 pm

Colombo (News 1st) புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.

கனடாவில் வசிக்கும் முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தார்.

வடக்கு – கிழக்கில் முதலீடுகளை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் இந்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு, கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியமைக்காக இதன்போது பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு பகுதியில் தமது முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்குள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அந்தப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்